/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yuvan_5.jpg)
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கொஞ்சம் பொழுதுபோக்கு, சமூக கருத்துகள் உள்ளிட்டவற்றை வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையேபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், இவரது அடுத்த படம் குறித்தஅதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படிஇயக்குநர் பிரதீப் ரங்கநாதன், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.இப்படத்தில் இவரே நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பதிவின்மூலம் உறுதிசெய்துள்ளார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)